4.17.2013

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

படம்: பாவ மன்னிப்பு 
இசை: M S V 
பாடியவர்: T.M.சௌந்தர்ராஜன் 

வந்த நாள் முதல் இந்த நாள் வரை   
வந்த நாள் முதல் இந்த நாள் வரை   
வானம் மாறவில்லை 
வான்மதியும் மீனும் கடல் காற்றும் 
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் 
நதியும் மாறவில்லை 
மனிதன் மாறிவிட்டான் 
ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ 

நிலை மாறினால் குணம் மாறுவான் 
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் 
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான் 
அதுவேதான் விதி என்று ஓதுவான் 
மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான் 
ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ 

பறவையை கண்டான் விமானம் படைத்தான் 
பறவையை கண்டான் விமானம் படைத்தான் 
பாயும் மீன்களில் படையினை கண்டான் 
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் 
எதனை கண்டான் பணம் தனை படைத்தான் 
எதனை கண்டான் பணம் தனை படைத்தான் 
மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான் 
ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ 

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி 
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி 
பாரில் இயற்கை படைத்ததெல்லாம் 
பாவி மனிதன் பிரித்து வைத்தானே 
மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான் 
ம் ம் ம் ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ 

வந்த நாள் முதல் இந்த நாள் வரை   
வானம் மாறவில்லை 
வான்மதியும் மீனும் கடல் காற்றும் 
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் 
நதியும் மாறவில்லை 
மனிதன் மாறிவிட்டான் 
ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ .