4.01.2017

மறு வார்த்தை பேசாதே

படம்: எனை நோக்கி பாயும் தோட்டா 
இசை: யுவன்?!
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம் 

மறு வார்த்தை  பேசாதே
மடிமீது  நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு 
மயில் தோகை போலே விரலுன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
விழிநீரும் வீணாக 
இமைத்தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண்ணானதே
மறந்தாலும் நான்  உன்னை 
நினைக்காத  நாளில்லையே 
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும்  பொய்யில்லையே
           

விடியாத  காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வைத் துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணிக்காட்டும் கடிகாரம் 
தரும்வாதை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை 
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம் மடிந்தாலும் வரும்
மு தல் நீ  முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ
     
தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும் நீ
விழியோரம்தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய் 
இதழ் என்னும் மலர்கொண்டு
கடிதங்கள்  வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே 
கனவாகி கலைந்தாய் 
பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழை காலம்

மறு வார்த்தை  பேசாதே
மடிமீது  நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு 
மயில் தோகை போலே விரலுன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
விழிநீரும் வீணாக 
இமைத்தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண்ணானதே
மறந்தாலும் நான்  உன்னை 
நினைக்காத  நாளில்லையே 
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும்  பொய்யில்லையே
           

வானில் தேடி நின்றேன்

படம்: காற்று வெளியிடை
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: சத்யபிரகாஷ் & சின்மயீ

வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்
வானில் நீ எழுந்தாய்
என்னை நட்சித்திர காட்டில் அலைய விட்டாய்
நான் என்ற எண்ணம் தொலைய விட்டாய்
நல்லை அல்லை
நன்னிலவே நீ நல்லை அல்லை
நள்ளிரவே நீ நல்லை அல்லை

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே

நான் உன்னை தேடும் வேளையிலே நீ
மேகம் சூடி ஓடி விட்டாய்
நல்லை அல்லை நல்லை அல்லை
நன்னிலவே (நன்நிலவே) நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
நள்ளிரவே நீ நல்லை அல்லை


முகை முகில் முத்தென்ற நிலைகளிலே
முகம் தொட காத்திருந்தேன்
மலர் என்ற நிலை விட்டு
பூத்திருந்தாள்  மனம் கொள்ள காத்திருந்தேன்
மகரந்தம் தேடி நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்


நல்லை அல்லை நல்லை அல்லை
நாரும்  பூவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
முல்லை கொல்லை நீ நல்லை அல்லை.

10.18.2015

கனநாயகாயா கனதெய்வட்தாய கனாதக்ஷ்யாயா தீமகி

கனநாயகாயா கனதெய்வட்தாய கனாதக்ஷ்யாயா தீமகி
குண ஷாரிறாயா குண மந்தித்தாயா குணஷானையா தீமகி
குணா தீத்யாய  குணா தீஷாய குணா ப்ரவிஷ்ட்தயா  தீமகி

ஏகதண்டயா வக்ரதுண்டாய கௌரி தனையாய தீமகி
கஜேஷ்ணாய பாலச்சந்திரயாய ஸ்ரீ கணேஷாயா தீமகி

ஏகதந்தாயா  வக்ரதுண்டாய கௌரி தனையாய தீமகி
கஜேஷ்ணாயாயா  பாலச்சந்திரயாய ஸ்ரீ கணேஷாயா தீமகி

கான சத்துராய கான பிரணாய கான தராத்மனே
கானச்  சுக்காயா கான மட்டாய கானச்  சுக மனசே
குரு பூஜிதாய குரு தெய்வத்தாய குரு குலத்தாய்னே  
குரு விக்ரமாய குய்ய ப்ரவராயா குருவே குண குருவே
குருதைட்யா கலச்சேத்ரே குரு தர்ம சடராட்யாய
குரு புத்ர பரிராட்ரே குரு பகண்ட கண்டகாயா

கீதை சாராய கீதை தத்வாயா   கீதை கோத்ராயா தீமகி
கூதா குல்ஃபாய கந்த மட்டாயா கோஜெய பிரதாயா தீமகி
குணா தீத்தாயா  குணா தீஷாயா குணா ப்ரவிஷ் தாயா தீமகி

ஏகதந்தாயா  வக்ரதுண்டாய கௌரி தனையாய தீமகி
கஜேஷ்ணாயாயா  பாலச்சந்திரயாய ஸ்ரீ கணேஷாயா தீமகி

சர்வ ராஜயா கந்தாய சர்வ கான ஷ்ரவன பிரணயமே
காதாயா ராகாயா  க்ரந்தயா கீதாயா க்ரந்தர்த்த தன்மையியே
குர்லி குணவதே கணபதேயே    

கிரந்த கீதாயா கிரந்த கேயாயா கிராந்தார்த்மனே
கீதை லினாயா கீதா ஷரயாய கீதை வாத்யா படவே
தேய சரிட்யாய காயா கௌராயா கந்தர்வ்ப்ரி கிருபே
காயகாதின விக்ரயாயா கங்காஜல ப்ரணயவதே
கௌரி ஸ்நந்தனாய கௌரி ஹிரதய நந்தனாய
கௌர பானு சுதாயே  கௌரி கணேஷ்வராயா

கௌரி ப்ரனயாய கௌரி ப்ரவனாயா கௌர பாவாய தீமகி
கோஷ ஹஸ்ட்ராய கோவர்ட்னாய  கோப கோபாய தீமகி
குணா தீட்யாய குணா தீஷாய குணா ப்ரவிஷ்ட்யாய தீமகி

ஏகதந்தாயா  வக்ரதுண்டாய கௌரி தனையாய தீமகி
கஜேஷ்ணாயாயா  பாலச்சந்திரயாய ஸ்ரீ கணேஷாயா தீமகி

ஏகதந்தாயா  வக்ரதுண்டாய கௌரி தனையாய தீமகி
கஜேஷ்ணாயாயா  பாலச்சந்திரயாய ஸ்ரீ கணேஷாயா தீமகி




 
https://youtu.be/zE52deTnstw

பேரைக்கேட்ட பேஜாரு பண்ற

படம்: 10 எண்றதுக்குள்ள
இசை: இமான்
பாடியவர்கள்: சந்தோஷ் ஹரிஹரன்

பேரைக்கேட்ட பேஜாரு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ!
பீஸு வாங்கி கன்பூஸு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ!

நான் பாய்ஞ்சா புல்லெட் தான்
ஆபத்தே சிக்லெட் தான்
காரோட்டும்  ஃபைட் ஜெட்டு நான்
பொண்ணுங்க மேக்நெட் நான்
எனக்கினு இல்ல கூண்டு
உன் நெஞ்ஜில ஏண்டா காண்டு
உனக்கென வேணும் வேண்டு
என்னோட பேரு பாண்டு
பாண்டு  ஜேம்ஸ் பாண்டு

பேரைக்கேட்ட பேஜாரு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ!
பீஸு வாங்கி கன்பூஸு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ!
என் கண்ணில் அச்சம் இல்ல
என் போல உச்சம் இல்ல
ஊருக்கு செல்ல புள்ள
எதிரிக்கு நான்தான் தொல்லை
எனக்கினு இல்லை வெளி
நான்  வரைக்கும் ஜாலி
அடிச்சா எல்லாம் காலி என்னோட பேரு கோலி
கோலி விராட் கோலி

பேரைக்கேட்ட பேஜாரு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ!
பீஸு வாங்கி கன்பூஸு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ!

என் ஊரு பரமக்குடி நான் யாரு கண்டுபிடி
முத்த வித்தை அத்துப்படி என்கிட்டே கத்துக்கடி
படிப்புக்கு போகலை டியூஷன் ஆனா நடிப்புல நான் ஒரு ஓஷன்
புதுமைகைதான் என் பேஷன் என்னோடு பேரு ஹாசன்
ஹாசன் கமல் ஹாசன்
நீ நல்லவனா இல்லை கெட்டவனா
ரெண்டும் சேர்ந்தது தான் நான்
அயம் எ ஹீரோ அண்ட் எ  வில்லன்


https://youtu.be/jCWbhsVOJYU

1.26.2015

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப் பூ

படம்: உழவன்
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : SPB

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்  பூ சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்  பூ சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்  பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்  பூ மணக்கும் சந்தனப்  பூ
சித்திர மேனி தாழம் பூ சேலை அணியும் ஜாதிப்  பூ
சிற்றுயிடை  மீது வாழைப்  பூ ஜொலிக்கும் செண்பகப்  பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ சிரிப்பு மல்லிகை பூ

தென்றலை போல நடப்பவள்  என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்  பூ சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்  பூ சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்  பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்  பூ மணக்கும் சந்தனப்  பூ
சித்திர மேனி தாழம் பூ சேலை அணியும் ஜாதிப்  பூ
சிற்றுயிடை  மீது வாழைப்  பூ ஜொலிக்கும் செண்பகப்  பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ சிரிப்பு மல்லிகை பூ

சித்திரை மாத நிலவொளி அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள் வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள் அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்  பூ சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்  பூ சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்  பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்  பூ மணக்கும் சந்தனப்  பூ
சித்திர மேனி தாழம் பூ சேலை அணியும் ஜாதிப்  பூ
சிற்றுயிடை  மீது வாழைப்  பூ ஜொலிக்கும் செண்பகப்  பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ ஹ ஹ ஹா