12.11.2012

நல்லதோர் வீணை செய்து அதை


படம்: மறுபடியும் 
இசை: இளையராஜா 
பாடியவர்: ஜானகி 

நல்லதோர் வீணை செய்து அதை 
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ  
நல்லதோர் வீணை செய்து அதை 
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ  
சொல்லடி சிவசக்தி சுடர்மிகு அறிவுடன் 
என்னை   படைத்தாய் 
சொல்லடி சிவசக்தி சுடர்மிகு அறிவுடன் 
என்னை   படைத்தாய் நீ 
நல்லதோர் வீணை செய்து அதை 
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ  

பூமாலை ஓர் தோளில்தான் 
போட நினைப்பால் பெண் 
போட்டாலும் பூமாலைக்கோர் 
பொருளும் இல்லையே 
நாளொரு தோளினில் 
மாலையை மாற்றிடும் 
ஆண்கூட பெண் வாழ்வதா 
அதை நாமும் பண்பேன்பதா 
இது நியாயமா 
நல்லதோர் வீணை செய்து அதை 
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ 

ஆனந்த நீரோடையில் 
ஆட நினைத்தேன் நான் 
நான் பார்த்த கோதாவரி 
கானல்  வரியா 
தாய்மனை அகன்றதும் 
தலைவனை அடைந்ததும் 
நான் செய்த தீர்மானம்தான் 
அதற்கிந்த சன்மானம்தான்
அவமானம்தான்  
நல்லதோர் வீணை செய்து அதை 
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ  
சொல்லடி சிவசக்தி சுடர்மிகு அறிவுடன் 
என்னை   படைத்தாய் நீ 
நல்லதோர் வீணை செய்து அதை 
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ .