படம் : திருவருட்செல்வர்
இசை: K .V .மகாதேவன்
பாடியவர்: சுஷீலா
மன்னவன் வந்தானடி தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ
நாயகனோ நானறியேன்
மாயவனோ தூயவனோ
நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி தோழி
செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுத்தேன்
வண்ண சந்ததிலே கவிதை சரம் கொடுப்பேன்
செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுத்தேன்
வண்ண சந்ததிலே கவிதை சரம் கொடுப்பேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
இனி முப்பொழுதும் கற்பனையில்
அற்புதமாய் வாழ்ந்திருக்கும்
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
தூவிய பூவினில் மேனிகள் ஆடிட
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்
மன்னவன் வந்தானடி
காதற் கவிதை கடலென பெருகிட
மாதர் மனமும் மயிலென நடமிடவே
மன்னவன் வந்தானடி
சிறு மலர் மனமொரு குறுநகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனியிதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி
தித்திதால் அது செம் பொற்கிண்ணம்
தத்தி தாவிடும் தங்க கிண்ணம்
சித்தத்தால் ஒரு காதற் சின்னம்
தத்தி தாவென பாவை முன்னம்
என் மன்னவன்
விரைவினில் நீ நீ
மணமலர் தா தா
திருமார் பா பா
தாமாதா மா மா
மயில் எனை க கா
நீ தா பா மா கா
ஆளும் புவி ஏழும் கடல்
நடமாடும் படி வாராய்
அருள் தாராய்
ஆளும் புவி ஏழும் கடல்
நடமாடும் படி வாராய்
அருள் தாராய்
அனுதினம் உனை வழிபடும்
மடமையில் இனி ஒரு
தலைவனை பணிவதில்லை
மன்னவன் வந்தானடி .