11.09.2012

மனம் விரும்புதே உன்னை

படம்: நேருக்கு நேர் 
இசை: தேவா 
பாடியவர்: ஹரிணி 

மனம் விரும்புதே உன்னை உன்னை  மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே 
நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா 
அய்யோயோ மறந்தேனடா  உன் பேரே தெரியாதுடா 
மனம் விரும்புதே உன்னை உன்னை  மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் 
அழகாய்தான் ஒரு புன்னகை பூத்தாய் 
அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது 
அதிலே என் மனம் தெளியும் முன்பே 
அன்பே உந்தன் அழகு முகத்தை 
யார் வந்து என் இள மார்பில் ஒட்டியது 
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே மனம்  ஏங்குதே மனம்  ஏங்குதே 
நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா 
அய்யோயோ மறந்தேனடா  உன் பேரே தெரியாதுடா 
மனம் விரும்புதே உன்னை உன்னை  மனம் விரும்புதே
உன்னை உன்னை உன்னை 

மழையோடு நான் கரைந்ததுமில்லை 
வெயிலோடு நான் உருகியதில்லை 
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா 
மலைநாடு கரும்பாறை மேலே 
தலைகாட்டும் சிறு பூவைப்போலே 
பொல்லாத இளம் காதல் பூத்ததடா 
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே 
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே 
என் காதலா என் காதலா என் காதலா 
நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா 
அய்யோயோ மறந்தேனடா  உன் பேரே தெரியாதுடா 
மனம் விரும்புதே உன்னை உன்னை  மனம் விரும்புதே