படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி
ஊரு சனம் தூங்கிருச்சி ஊத காத்தும் அடிச்சிருச்சி
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
ஊரு சனம் தூங்கிருச்சி ஊத காத்தும் அடிச்சிருச்சி
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
ஊரு சனம் தூங்கிருச்சி ஊத காத்தும் அடிச்சிருச்சி
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இளமையிலு மாமன் கவிகுயிலு
ராகம் பாடும் கேட்டாலே செய்தி சொல்லும் பாட்டாலே
உன்னை எண்ணி நானே உள்ளம் வாடி போனேன்
கன்னி பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒத்தையில அத்தமக உன்னை எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே
ஊரு சனம் தூங்கிருச்சி ஊத காத்தும் அடிச்சிருச்சி
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாற கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா
நெலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரம்தான் இந்த நேரம்தான்
உன்னை எண்ணி பொட்டுவைச்சேன் ஓல பாயை போட்டுவைச்சேன்
இஷ்டப்பட்ட ஆசை மச்சான் என்னை ஏங்க ஏங்கவைச்சான்
ஊரு சனம் தூங்கிருச்சி ஊத காத்தும் அடிச்சிருச்சி
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே .