11.03.2012

முதல் முதலாக முதல் முதலாக


படம்: உன்னாலே உன்னாலே 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 
பாடியவர்கள்: கார்த்திக்,ஹரிணி 

முதல் முதலாக முதல் முதலாக   
பரவசமாக பரவசமாக வா வா வா  அன்பே 
ஒ ஒ தனித்தனியாக தன்னந்தனியாக 
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே 

உன்னாலே உன்னாலே விண்ணால சென்றேனே 
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே 
ஒரு சொட்டு கடலும் நீ 
ஒரு பொட்டு  வானம்  நீ 
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் 
ஒ ஒளிவீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ 
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன் 
முதல் முதலாக முதல் முதலாக   
பரவசமாக பரவசமாக வா வா வா  அன்பே 
ஒ தனித்தனியாக தன்னந்தனியாக 
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே 

ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை நாளத்தை 
தாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே 
நதி மீது சருகை போல் உன் பாதை வருகின்றேன் 
கரை தேற்றி விடுவாயோ கதி மோட்சம் தருவாயோ 
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறி போனேனே 
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே 
முதல் முதலாக முதல் முதலாக   
பரவசமாக பரவசமாக வா வா வா  அன்பே 
ஒ தனித்தனியாக தன்னந்தனியாக 
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே
உன்னாலே உன்னாலே விண்ணால சென்றேனே 
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே 

நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக 
மழையோடு வெயில் சேரும் 
அந்த வானிலை சுகமாகும் 
சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல் 
எதில் வந்து  சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் 
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம் 
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம் 
பபப்பா பபப்பா ப ப  பபப்பா 
உன்னாலே உன்னாலே விண்ணால சென்றேனே 
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே 
ஒரு சொட்டு கடலும் நீ 
ஒரு பொட்டு  வானம்  நீ 
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் 
ஒளிவீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ 
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன் .