படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SPB சித்ரா
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பறி மாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பறி மாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலை அழகோ
பன் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
அதி மழையோ புனலோ நதியோ கலை அழகோ
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே
தொடர்ந்திடும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பறி மாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோல் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்
தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பறி மாறும்
அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்.