10.04.2012

மனதில் என்ன நினைவுகளோ


படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SPB ஷைலஜா 

மனதில் என்ன நினைவுகளோ 
இளமை கனவோ 
அதுவோ எதுவோ 
இனிய ரகசியமோ 
மனதில் என்ன நினைவுகளோ 
இளமை கனவோ 

தனிமை இருளில் உருகும் நெஞ்சம் 
துணையை விரும்புமே 
துணையை விரும்பி இணையும் பொழுது 
அமைதி அரும்புமே 
ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் பாவம் மனதில் வளருமே 
காதலின் பார்வையில் சோகம் விலகும் 
மனதில் என்ன நினைவுகளோ 
இளமை கனவோ 

நடந்து முடிந்த கதையை மறந்து புதிய வழியிலே 
புதிய வழியில் புதிய உறவில் 
புதிய உலகிலே 
செல்லுங்களேன் செல்வங்களே 
உலகம் மிகவும் பெரியது 
கருணையின் கைகளில் தாய்மை மலரும் 
மனதில் என்ன நினைவுகளோ 
இளமை கனவோ 
அதுவோ எதுவோ 
இனிய ரகசியமோ