படம்: வாகை சூட வா
இசை: கிப்ரான்
பாடியவர்: சின்மயி
சர சர சாறக்காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
சர சர சாறக்காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்து போன நெஞ்சை தைக்க
ஒத்த பார்வை பார்த்து செல்ல மொத்த சொத்த
எழுதி தாரேன் மூச்சி உட்பட
இத்து இத்து இத்து போன நெஞ்சை தைக்க
ஒத்த பார்வை பார்த்து செல்ல மொத்த சொத்த
எழுதி தாரேன் மூச்சி உட்பட
டீ போல நீ என்னை ஏன் ஆத்துற
சர சர சாறக்காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
எங்க ஊரு புடிக்குதா எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா
முட்ட கோழி புடிக்கவா முறைப்படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில் என்னை கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா சமைச்ச கையை கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பார்க்கிறேன்
ரெட்ட தோசை சுட்டு வச்சி காவக்காக்குறேன்
முக்கண்ணு நொங்குதான் வெக்குறேன்
மண்டு நீ கங்கு ஏன் கேக்குற
சர சர சாறக்காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
புல்லு கட்டு வாசமா புத்திக்குள்ள வீசுற
மாட்டுமணி சத்தமா மனசுக்குள் கேட்கிற
கட்டவண்டி ஓட்டுற கையளவு மனசுல
கையெழுத்து போடுற கன்னி பொண்ணு மார்புல
மூணு நாளா பார்க்கல ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியில உறங்கி போகும் பூனையா
தன்னை வந்து பார்த்துதான் கெறங்கி போறியா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியலே மக்கு நீ
சர சர சாறக்காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
சர சர சாறக்காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்து போன நெஞ்சை தைக்க
ஒத்த பார்வை பார்த்து செல்ல மொத்த சொத்த
எழுதி தாரேன் மூச்சி உட்பட
இத்து இத்து இத்து போன நெஞ்சை தைக்க
ஒத்த பார்வை பார்த்து செல்ல மொத்த சொத்த
எழுதி தாரேன் மூச்சி உட்பட
டீ போல நீ என்னை ஏன் ஆத்துற
காட்டுமல்லி பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கென்ன காய்ச்சலா .