10.10.2012

பனி விழும் மலர்வனம்

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்: SPB

பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனி மரம் 

பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனி மரம் 
ஹே ஹே இனிவரும் முனிவரும் தடுமாறும் கனி மரம் 
பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை 
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் 
ஹே ஹே இளமையின் கனவுகள்  விழியோரம் துளிர்விடும் 
கைகளில் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிறிது கண்மூடும் 
பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனி மரம் 
ஹே ஹே இனிவரும் முனிவரும் தடுமாறும் கனி மரம் 

காமன் கோவில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் 
காமன் கோவில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் 
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே 
ஹே ஹே வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே 
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி 
பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனி மரம் 
ஹே ஹே இனிவரும் முனிவரும் தடுமாறும் கனி மரம் 
பனி விழும் மலர்வனம் பனி விழும் மலர்வனம்
பனி விழும் மலர்வனம்.