காய்கறி குருமா
தேவையான காய்கள்
வெங்காயம் மீடியம் சைஸ் - 2
தக்காளி மீடியம் சைஸ் - 2
உருளை கிழங்கு - 2
காரட் - 2
பீன்ஸ்,பட்டாணி - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
தேவையான பொருட்கள்
சோம்பு,பட்டை ,லவங்கம் தாளிக்க
அரைக்க வேண்டிய பொருட்கள்
வதக்கிய வெங்காயம் தக்காளி
1/4cup துருவின or கட் பண்ணின தேங்காய்
செய்முறை
நறுக்கின வெங்காயம் தக்காளியை எடுத்து கொள்ளவும்,அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு,பட்டை ,லவங்கம் போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி கொள்ளவும்(இதில் சரி பாதியை எடுத்து தனியாக மிக்ஸ்யில் தேங்காய் 1/4 கப் வைத்து அரைத்து கொள்ளவும்) பாத்திரத்தில் மீதி இருக்கிற வெங்காயம் தக்காளி கலவை கூட இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.பிறகு கட் பண்ணி வைத்து இருக்கிற காய்களை எல்லாம் போட்டு வதக்கி 4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு,மஞ்சள் தூள் போடவும்.காய்கறிகள் பாதி வேகும் பொழுது மிளகாய் தூள் (சாம்பார் பொடி) போட்டு கொதிக்க விடவும்.காய்கள் வெந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவை குருமாவில் விட்டு 2 கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை போடவும்.