3.30.2009

பூண்டு குழம்பு

பூண்டு குழம்பு நான்கு பேர் சாப்பிடலாம்
தேவையான நேரம் - 40 நிமிடம்
தேவையான பொருட்கள் பூண்டு - 2 முழு பூண்டு (பூண்டு குழம்புக்கு பூண்டு தேவையான்னு கேட்காதிங்க ;)
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 2 அரை நெல்லிக்காய் அளவு
உப்பு - 11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன் (தனியா,சிகப்பு மிளகாய்,சீரகம்,மஞ்சள்,கொத்தமல்லி விதை எல்லாம் போட்டு அரைத்து இந்தியாவில் இருந்து அம்மா எனக்கு அனுப்புவாங்கப்ப..எனக்கு அளவு தெரியாது)

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காய பொடி,கறிவேப்பிலை.

செய்முறை

பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 spoon எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்.அதன் பிறகு பூண்டு,வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி,அதில் பாதியை எடுத்து அரைத்து கொள்ளவும். அதன் பிறகு புளி தண்ணிரை ஊற்றி கொதிக்க விடவும். உப்பு ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் அனைத்தும் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.10 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து 3 spoon நல்லெண்ணெய் விட்டு நிறுத்தவும்.