10.15.2013

ஓ ஹோ ஹோ காலைக்குயில்களே கவிதை பாடுதே

படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
இசை: இளையராஜா
பாடியவர் :ஜானகி

ஓ ஹோ ஹோ  காலைக்குயில்களே கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும்
பனித்துளியில் மலர்கொடிகள் குளிக்கிற பொழுதல்லவா
பசுங்கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா
ஓ ஹோ ஹோ  காலைக்குயில்களே கவிதை பாடுதே

எழில் கொஞ்சும் பூவில் மலைத்தென்றல் வந்து
முகம் துடித்தே முதல் முத்தத்தை தருவதும் ஏனடியோ
அதை காணும் வேளை இளங்கன்னி பாவை
மனதினிலே புது உணர்ச்சி மலர்வதும் ஏனடியோ
இது என்ன மாயம் இது என்ன ஜாலம்
இது என்ன மாயம் இது என்ன ஜாலம்
காதலா ஆசையா காரணத்தை நீயும் சொல்லடி
ஓ ஹோ ஹோ  காலைக்குயில்களே கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும் நெஞ்சில் இன்பமாகும்
பனித்துளியில் மலர்கொடிகள் குளிக்கிற பொழுதல்லவா
பசுங்கிளிகள் சிறகடித்தே பறக்கிற பொழுதல்லவா
ஓ ஹோ ஹோ  காலைக்குயில்களே கவிதை பாடுதே

மலைச்சாரல் காற்று உடையோடு சேர்த்து
மலருடலை தழுவயிலே மணிவிழி மயங்குதடி
எனை தூண்டும் பாட்டோ சுகம் பொங்கும் ஊற்றோ
என்ன என்னவோ உணர்வுகளை தொட்டு தொட்டு எழுப்புதடி
இதில் எந்த நேரம் இளம் நெஞ்சின் ஓரம்
இதில் எந்த நேரம் இளம் நெஞ்சின் ஓரம்
மின்னல் போல் நாணமே மேடை கட்டி ஆடுகின்றதே