படம்: அழகன்
இசை: மரகதமணி
பாடியவர்: SPB
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழு நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்
தாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான்
கடுகு போல் உன்மனம் இருக்ககூடாது
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப்போல் எல்லோரும் என
எந்நாளும் அதில் இன்பத்தை தேடனோம்
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி
உலகம் யாவும் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகம் எல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம்தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம்தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு .