2.25.2013

அடி ராக்காயி மூக்காயி குப்பாயி

இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி 
படம்: அன்னக்கிளி 

அடி ராக்காயி மூக்காயி குப்பாயி 
செவப்பி கஸ்துரி மீனாக்க்ஷி 
தங்கபல் காரையா 
தங்கமகளுக்கும் வாத்தியார் ஐயாவுக்கும் 
தை மாசம் கல்யாணம் 
நெல்லு குத்த வாங்கடியோ 

சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் 
முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தான்  வேணும் 
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கத்தான்  வேணும் 
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் 
முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தான்  வேணும் 
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கத்தான்  வேணும் 
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

பத்தோடு ஒன்னு பலகாரம் பண்ண 
சத்தாக மாவுடிங்க ஒ ஹோய்ய 
கல்லோடு உமியும் சேராம பார்த்து 
பக்குமா இடிங்க 
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம் 
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம் 
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம் 
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
இதுதானே கல்யாண விருந்தென்று 
ஊரே பாராட்ட வேணும் 

சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் 
முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தான்  வேணும் 
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கத்தான்  வேணும் 
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

லாலி லாலி லாலி 

மாப்பிளை பொண்ணு மணவறை  காண 
பொன்னாலே கோலமிடுங்க ஒ ஹோய்ய 
மாவிளை  தென்னை இலங்குருத்தாக 
வீடுங்கும்  ஆட விடுங்க 
வெள்ளி  மானாக வரணும் மணப்பொண்ணு 
தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை 
இதுதானே கல்யாணமென்று 
ஊரே பாராட்ட வேணும் 

சுத்த மஞ்சள் பட்டுசேல கட்டத்தான் வேணும் 
முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான்  வேணும் 
சுத்த மஞ்சள் பட்டுசேல கட்டத்தான் வேணும் 
முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான்  வேணும் 
முல்லைவெள்ளி  போல பொண்ணு மின்னத்தான் வேணும் 
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்.