12.11.2012

கண்மணியே காதல் என்பது கற்பனையோ

படம்: ஆறில் இருந்து அறுபது வரை 
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: SPB ஜானகி 

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பார்வையின் 
ஜாடையில் தோன்றிடும் ஆசையில்
பாடிடும் எண்ணங்களே  இந்த பாவையின் உள்ளத்திலே 
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

லாலாலா லாலாலா லாலாலா 
பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது
காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோகமும்  தாபமும்
வாலிபம் கண்ட சுகம் இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க
வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ.