11.09.2012

கண்ணுக்கு மை அழகு

படம்: புதிய முகம் 
இசை: A .R .ரஹ்மான் 
பாடியவர்: சுஷீலா 
கவிஞர் : வைரமுத்து 

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு 
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு 

மழை நின்ற பின்னாலும் இலை  சிந்தும் துளி அழகு 
அலை மீண்டு  போனாலும் கரை கொண்ட நுரை அழகு 
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதான் அழகு 
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதான் அழகு 
இளமாறன் கண்ணுக்கு எப்பொழுதும் நான் அழகு 

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு 
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு 

ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழல் அழகு 
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு 
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு 
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு 
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓரழகு 

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு 
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு.