11.09.2012

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு

படம்: புதிய முகம் 
இசை: A .R .ரஹ்மான் 
பாடியவர்: உன்னி மேனன்
கவிஞர் : வைரமுத்து 

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு 
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு 

இளமைக்கு நடை அழகு முதுமைக்கு நரை அழகு 
கள்வருக்கு இரவு அழகு காதலர்க்கு நிலவழகு 
நிலவுக்கு கறை  அழகு பறவைக்கு சிறகு அழகு 
நிலவுக்கு கறை  அழகு பறவைக்கு சிறகு அழகு 
அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு 

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு 
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு 

விடிகாலை விண்  அழகு விடியும் வரை பெண் அழகு 
நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு கீற்றழகு 
ஊருக்கு ஆறு அழகு ஊர்வலத்தில் தேர் அழகு 
ஊருக்கு ஆறு அழகு ஊர்வலத்தில் தேர் அழகு 
தமிழுக்கு ழ அழகு தலைவிக்கு நான் அழகு 

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு 
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு 
கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு