11.28.2012

ஒரு நாள் ஒரு கனவு

படம்: கண்ணுக்குள் நிலவு 
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: ஜேசுதாஸ்,அனுராதா ஸ்ரீராம் 

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது 
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது 
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட 

நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிழி கூட்டம் ம் 
கிளிகூட்டம் கிளிகூட்டம் வந்ததேனில் நீயொரு பழத்தோட்டம் ம்
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க
இரக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம்..
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணகிளி 
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது 
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ ஹோ 
உன் மனதை உன் மனதை எனை போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ 
ஒளி விடும் முகத்தினிலே கரை ஏன் முத்த அடையாளங்களோ 
இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ 
மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே 
சொல்லம்மா சொல்லம்மா நெஞ்சில் ஆடும் மின்னல் கொடி 
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது 
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது 
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட 
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது 
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது.