11.28.2012

ரோஜாப் பூந்தோட்டம்

படம்: கண்ணுக்குள் நிலவு 
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன் துளி  ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே
ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம்  மௌன ராகம்

விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி ஒ ஒ ஒ ஓ
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று உன் காதலில்  கிடைத்தடி ஒ ஒ ஒ ஓ
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகின்றதே
ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் 
மௌன ராகம்  மௌன ராகம்

உனை நினைத்து நான் விழித்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன் ஒ ஒ ஒ ஓ
நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்
பருவனிலை அதில் என் மலருடல் சிலிர்த்திருதேன் ஒ ஒ ஒ ஓ
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் 
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் 
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்
ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் 
மௌன ராகம்  மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் 
தேன் துளி  ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே
ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் 
மௌன ராகம்  மௌன ராகம்.