11.02.2012

பூவிலே மேடையை நான் போடவா

படம்: பகல் நிலவு 
இசை: இளையராஜா 
பாடியவர்கள்:  ஜெயச்சந்திரன் , சுஷீலா 

பூவிலே மேடையை நான் போடவா 
பூவிழி மூட நான் பாடவா 
தோளிரண்டில்  இரு பூங்கொடி 
என் சொந்தமெல்லாம் இதுதானடி 
பூவிலே மேடையை நான் போடவா 
பூவிழி மூட நான் பாடவா 

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை 
புன்னகை செய்தால் கண்படும் 
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட 
கண்ட என் நெஞ்சம் புண்படும் 
அண்ணன் தந்தை யாவும் அண்ணன் தானடி 
அன்பு கொண்டு வாழும் சொந்தம்தானடி 
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும் 
வரமும்  வேண்டி தினமும் தவமிருக்கும் 
பூவிலே மேடையை நான் போடவா 
பூவிழி மூட நான் பாடவா 
தோளிரண்டில்  இரு பூங்கொடி 
என் சொந்தமெல்லாம் இதுதானடி 
பூவிலே மேடையை நான் போடவா 
பூவிழி மூட நான் பாடவா .