படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: SPB
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவம் சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவம் சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும்
இசையை மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும்
இசையை மலர்வேன்
கேளாய் பூமனமே ஒ .....
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூ மனமே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம் .