படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா
பாடியவர்: SPB
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
காதலின் ஜாடை எல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ
பூமியின் நீள நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது