படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தால்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
யாழிசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ
வீடெல்லாம் காதலன் வாசனை வீசுதோ
தூங்கினால் காதிலே நியாபகம் பேசுதோ
நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம்
தகு தகு தகு தகு தகு தகு தா
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தால்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
வானிலே வெண்ணிலா யாரைத்தான் தேடுதோ
மோக நோய் தீரவே நீரில்தான் மூழ்குதோ
வாசலில் வாலிபம் வாழ்விலே யவ்வனம்
கண்களோ சம்மதம் கால்களே தாமதம்
ஆடைகள் ஏது நீராடும்போது
தகு தகு தகு தகு தகு தகு தா
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தால்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ
மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
லாலாலா லாலாலா லாலாலா.