10.06.2012

இளமை எனும் பூங்காற்று

படம்: பகலில் ஓர் இரவு
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: SPB

இளமை எனும்  பூங்காற்று பாடியதோர் பாட்டு 
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலோர் சுகம் 
இளமை எனும்  பூங்காற்று பாடியதோர் பாட்டு 
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலோர் சுகம் 
ஒரே வீணை ஒரே ராகம் 

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம்  
காட்டு வழியில் பயணம் 
கங்கை நதிக்கு மண்ணில் அணையா!!!
இளமை எனும்  பூங்காற்று

அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற 
அள்ளி அணைத்த கைகள் 
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழுமுன் விழுந்தாள் 
எந்த உடலோ எந்த உறவோ 
இளமை எனும்  பூங்காற்று

மங்கை இனமும் மன்னன் இனமும் 
குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது 
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே  
இந்த நிலைதான் என்ன விதியோ 
இளமை எனும்  பூங்காற்று பாடியதோர் பாட்டு 
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலோர் சுகம் 
இளமை எனும்  பூங்காற்று பாடியதோர் பாட்டு 
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலோர் சுகம் 
ஒரே வீணை ஒரே ராகம்