10.18.2012

தேவன் திருச்சபை மலர்களே


படம்: அவர் எனக்கே சொந்தம்
இசை: இளையராஜா 
பாடியவர்:

தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே 
லலா லாலா 
தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே 
போடுங்கள் ஓர் புன்னகை கோலம் 
பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம் 

விண்மீனை உன் கைகளில் பார்க்கிறேன் 
பொன்மானை உன் நடையினில் காண்கிறேன் 
எங்கள் அன்னை மேரியின் 
பொங்கும் கருணை மழையிலே 
என் செல்வமே என் தெய்வமே 
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே 
தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே 
போடுங்கள் ஓர் புன்னகை கோலம் 
பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம் 

கண்ணே மணியே பொன்னெழில்  மலர்களே 
அன்பே அமுதே அருஞ்சுவை பயன்களே 
கொஞ்சும் மழலை மொழியிலே 
உள்ளம் மயங்க மயங்கவே 
பொன்வண்டு போல் சில்வண்டு போல் 
கவி பாடுங்கள் உலகம் மகிழவே 
தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே 
போடுங்கள் ஓர் புன்னகை கோலம் 
பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம் .