சேமியா கேசரி
தேவையான பொருட்கள்
சேமியா - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
நெய் -கால் கப்
கலர் -?
முந்திரி திராட்சை ஏலக்காய் கொஞ்சம்
செய்முறை
சேமியாவை வாணலில் ஒரு table ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக வறுத்து கொள்ளவும்.அப்புறம் அதில் ரெண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும்.சேமியா வெந்தவுடன் சர்க்கரையை அதில் போட்டு கிண்டி விட வேண்டும்.தனியாக ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி திராட்சை எல்லாம் போட்டு வறுத்து ஏலக்காய் அண்ட் கலர் சேர்த்து வேகவைத்த சேமியாவில் கொட்டி நன்றாக கிண்டி விட வேண்டும்.அவ்வளவுதான்.