3.13.2009

சாம்பார்,குழம்பு வகைகள்

சாம்பார்

சாம்பாருக்கு தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு 1 கப் (வேக வைத்து கொள்ள வேண்டும்)
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி -1/4 ஸ்பூன்

காய்கள்

நமக்கு தேவையான combination சாம்பார் வைத்து கொள்ளலாம்,உதாரணம்
1.மாங்காய்,முருங்கக்காய்
2.கத்திரிக்காய் முருங்கக்காய்
3.முள்ளங்கி
4.வெண்டைக்காய்
ஏதாவது ஒரு வகை எடுத்துக்கொள்ளுங்கள்...வெங்காயம் medium size தக்காளி மீடியம் சைஸ்
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு,சீரகம்,பெருங்காயதூள் கறிவேப்பிலை

பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு,தாளிக்க தேவையான பொருட்களை போட்டு கடுகு வெடித்ததும் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி,இது கொஞ்சம் வெந்ததும் சாம்பார் காய் போட்டு வதக்கி 3 கப் தண்ணீர் ஊற்றவவும்.(புளியை இதில் கரைத்து ஊற்றலாம்)சாம்பார் பொடி,உப்பு மஞ்சள்தூள் எல்லாம் போட்டு காய் வேகும் வரைக்கு கொதிக்க விடவும்.காய் வெந்தவுடன் வேக வைத்த பருப்பை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.5 நிமிடம் கொதித்தவுடன் stove நிறுத்தி விடவும்.கொத்தமல்லி தழையை கட் பண்ணி போடலாம்.

தேவையான நேரம் - 30 மினிட்ஸ் serving size - 6