11.11.2014

அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ

படம்: பூவுக்குள் பூகம்பம்
இசை: சங்கீதராஜன்
பாடியவர் : SPB

அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை  மீண்டும்  பார்ப்பாயோ
குயிலோசை கேக்குதோ ஓ கூக்கு   கூ
நீ எங்கே நான் இங்கே வா நீ வா
அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ

கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய்
கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய்
கண்ணே என் காதலி
நெஞ்சில் இருந்தே நித்தம் இனிக்கும்
நீயே என் நாயகி
நீயின்றி நானில்லை வா நீ வா
அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ

ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும்
ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும்
என் ஜீவன் உன்னிடம்
உன்னை தொடர்ந்தே
என் எண்ணம் இருக்கும்
நீயென்றும் என்னிடம்
நீயின்றி நானில்லை வா நீ வா

அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை  மீண்டும்  பார்ப்பாயோ
குயிலோசை கேக்குதோ ஓ கூக்கு   கூ
நீ எங்கே நான் இங்கே வா நீ வா.