4.04.2014

யாரோ யாரோ யாரிடம் யாரோ ஊரோ பேரோ தெரியவில்லை

படம்: மத யானை கூட்டம்
இசை: N.R.ரகுநந்தன்
பாடியவர்கள்: ஹரிசரண், மோனலி தாகூர்

யாரோ யாரோ யாரிடம் யாரோ ஊரோ பேரோ தெரியவில்லை
ஏனோ ஏனோ இதுவரை ஏனோ எனக்கும் அதுதான் புரியவில்லை
வழிகளில் வாச பூக்கள் வார்த்திடும்
மொழிகளில் தேகம் உருகியதே
நதியினில்  தோன்றும் மேக கூட்டம்
தலையினை வாரி ரசிக்கிறதே
தேநீரின் சாயலை உன்னிடம்
பார்த்தேனே நடக்கையிலே
நாள்தோறும் உசுப்பிய நிலவினை
கேட்டேனே பார்க்கையிலே

யாரோ யாரோ யாரிடம் யாரோ ஊரோ பேரோ தெரியவில்லை
ஏனோ ஏனோ இதுவரை ஏனோ எனக்கும் அதுதான் புரியவில்லை

வளையல் கையாலே வாசம் தந்தாயே
பசியுமில்லாமல் நெளிந்துருந்தேன்
உருட்டும் கண்ணாலே உயிரை எடுத்தாயே
உனக்கு முன்னாலே துடித்திருந்தேன்
நதிமேலே மிதக்கற புது அலையாய்
தலைகீழாய் தெரிகிற பிறை நிலவாய்
களவாடி போன உயிர் எனதல்லவா
நடமாடும் எனது உயிர் உனதல்லவா
ஆகாயம் விழிக்கிற நேரத்தில்
ஊரெல்லாம் உறங்கிடுதே
தூங்காத விழிகளின் இமைகள்
உன்னை பார்க்க துடிக்கிறதே

யாரோ யாரோ யாரிடம் யாரோ ஊரோ பேரோ தெரியவில்லை
ஏனோ ஏனோ இதுவரை ஏனோ எனக்கும் அதுதான் புரியவில்லை

எனது சாமங்கள்  உனது நினைவாலே
துளியும் தூங்காமல் விழித்திருந்தேன்
உடைந்து போகாமல் எனது நாணத்தை
உயிரில் புதைத்து வைத்து காத்திருந்தேன்
விடியாத பொழுதுக்கு வெடி வைத்தேன்
ஒண்ணாகி போகத்தானே உயிர் வைத்தேன்
இடி வந்து போனால் கூட தடம் இல்லையே
இதயத்தில் உன்னை விட யாருமில்லையே
புதிதாக குளிர்கிற மேகங்கள்
மழையாக வேர்க்கிறதே
தடுமாறும் விழிகளின் பாதைகள்
ஏதோதோ கேட்கிறதே