படம்: கோழி கூவுது
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்கு தானே எனக்கு தானே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்கு தானே எனக்கு தானே
குழல் வளர்ந்து அலை ஆனதே
இரவுகளின் இழை ஆனதே
குழல் வளர்ந்து அலை ஆனதே
இரவுகளின் இழை ஆனதே
விழி இரண்டு கடல் ஆனதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே எனக்கு தானே
பூவே இளைய பூவே
இளஞ்சிரிப்பு ருசி ஆனது
அது கனிந்து இசை ஆனது
இளஞ்சிரிப்பு ருசி ஆனது
அது கனிந்து இசை ஆனது
குயில் மகளின் குரல் ஆனது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது
இனிக்கும் தேனே எனக்கு தானே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்கு தானே எனக்கு தானே எனக்கு தானே.