படம்: நண்டு
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்.
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி
ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி
ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம் தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ
விரியும் பூக்கள் வானங்கள்
விசிரியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சி படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி
ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ம் ம் ம் ம் ம் ம் ம் .