10.08.2012

ஆனந்த ராகம் கேட்கும் காலம்

படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: உமா ரமணன்

ஆனந்த ராகம் கேட்கும் காலம் 
ஆனந்த ராகம் கேட்கும் காலம் 
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே 
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடாதோ 
ஆனந்த ராகம் கேட்கும் காலம்

துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே 
வெள்ளிமலை கோலங்களை அள்ளிகொண்ட மேகங்களை 
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே 
கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளி எழ
கட்டிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ 
ராகங்கள் பாட தாளங்கள் போட
வானெங்கும் போகாதோ 
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லாலா லாலா லாலா......

வண்ண வண்ண எண்ணங்களும் வந்து விழும் உள்ளங்களும் 
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே 
சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும் 
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே 
இன்று முதல் இன்பங்கள்  பொங்கி வரும் 
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும் 
காவ்விய ராகம் காற்றினில் கேட்கும் 
காலங்கள் ஆரம்பம் ....
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே 
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடாதோ 
ஆனந்த ராகம் கேட்கும் காலம்.
லாலா லாலா லாலா......