9.27.2012

உதயா உதயா உளறுகிறேன்


படம்: உதயா
இசை: எ.ர.ரஹ்மான் 
பாடியவர்கள்: ஹரிஹரன் சாதனா சர்கம் 

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன் 
காதல் காதல் 

காதல் தீண்டவே காதல் தீண்டவே 
கடல் தாகம் தீர்ந்ததே 
உன்னாலே தன்னாலே 
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல் காதல் காதல்

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே எந்நாளும்
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல் காதல் காதல்

என்னை தொலைத்துவிட்டேன்
ஏன் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏன் ஏனோ தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏன் ஏனோ மீண்டும் தொலைவேனோ
என் ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல் தீண்டவே

மூச்சி குமிழ்களிலே உயிர் ஊற்றி அனுப்பி வைத்தேன்
கூச்சம் அவிழ்கையிலே உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏன் ஏனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏன் ஏனோ நீயாய் ஆனேனோ
தாயும் ஆனவனே!!!
என் நேற்றின் பானையில் ஊற்றை திறந்து

காதல் ..........
காதல் தீண்டவே காதல் தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல் காதல்